கள்ளக் காதலி பிரித்தானியாவின் மகா ராணி ஆகிறார்
07 Feb,2022
நேற்றைய தினம் இரவு 10 மணிக்கு பிரித்தானிய மகாரணியார் தூக்கிப் போட்ட குண்டு ஒன்று, வெடித்துச் சிதறி செய்தியாக உலகம் எங்கும் பரவி வருகிறது. அது என்னவென்றால் சார்ளஸின் தற்போதைய மனைவி கமீலா பாகர், தன்னை மகாராணி என்று, அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்பது தான். மகாராணிக்கு பின்னர், அவரது மகன் சார்ளஸ் பிரித்தானியாவின் மாஹா ராஜாவாக முடி சூட உள்ளார். அவரது மனைவி கமீபா பாக்கர் இளவரசியாக இருப்பார். ஆனால் அந்த இளவரசி என்ற பட்டத்தை விடுத்து. அவர் தன்னை மகாராணி என்று அழைக்க முடியும் என்று, எலிசபெத் மகாராணி தெரிவித்து. அதனை சாசனமாக மாற்றி பெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளார். இதனால் இனி ராஜா ராணி என்று இருவரையும் அழைக்க வேண்டும். நமக்கு எல்லாம் தெரியும்ஸ
ஜூலை மாதம் 1981ம் ஆண்டு, தனது நீண்ட நாள் காதலியான டயானாவை கரம் பிடித்தார் சார்ளஸ். பின்னர் காலங்கள் கடந்தோடவே இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் சற்று தளர ஆரம்பித்தது. இதற்கு காரணமே சார்ளஸ்சுக்கு கமிலாவோடு ஏற்பட்ட கள்ளக் காதல் தான். ஒரு முறை சார்ளஸ் தனியாக தங்கி இருந்த அறையில் கட்டிலுக்கு அடியில், பெண்கள் அணியும் உள்ளாடை ஒன்றை தற்செயலாக கண்டார் டயானா. இதனை அடுத்து அவர் நடத்திய புலனாய்வில் அது கமீலாவுடையது என்று கண்டு பிடித்தார் டயானா. இதனை அடுத்தே அவர் சார்ளசை விட்டுப் பிரிந்தார். இது ஊர் அறிந்த உண்மை. பின் வாசலால் வந்து சென்ற கமீலா, இதன் பின்னர் நேரடியாக முன் வாசலால் வந்து சென்றார். பின்னர் டயானா இறந்ததும்(கொல்லப்பட்டதும்) சார்ளஸ் கமிலாவை ரகசிய திருமணம் செய்து கொண்டார். ஆனால் அன்று முதல் இன்றுவரை கமீலா மகாராணியாரின் மனம் நோகாத வண்ணம் நடந்து வந்துள்ளார். ஏன் எதற்கு என்றுஸ
ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேசியதே இல்லை. டயானாவின் பிள்ளைகளை தன் பிள்ளை போல வளர்த்து வந்தார். இதனை பல வருடங்களாக மகாராணியாரும் அவதானித்து வந்தார். இன் நிலையில், தான் நீண்ட நாடகள் உயிரோடு இருக்க மாட்டேன் என்பதனை தற்போது புரிந்து கொண்ட மகாராணியார், சில நாட்களாகவே பல அறிவித்தல்களை வெளியிட்டு, வருகிறார். அதில் ஒன்று தான், இந்த ராஜா ராணி திட்டம். இனி என்ன கள்ளக் காதலிக்கு யோகம் தான் போங்கள்