அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நிவாரணத்தை ஈரான் வரவேற்கிறது!
06 Feb,2022
2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் சிவில் அணுசக்தி திட்டத்தின் மீதான பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமெரிக்காவின் அறிவிப்பு நல்லது என ஈரான் கூறியுள்ளது.
இருப்பினும் பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்வது மட்டும் போதுமானதாக அமையாது என ஈரான் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2020 மே அன்று ட்ரம்ப் அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ரஷ்ய, சீன மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் ஈரானிய அணுசக்தி தளங்களில் பரவல் அல்லாத பணிகளை மேற்கொள்ள, பொருளாதாரத் தடைகள் நிவாரணதிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
2015 ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திரும்பப் பெறாது என்ற உத்தரவாதத்தைப் பெறுவதுதான் அணுசக்தி பேச்சுவார்த்தையில் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்று என அமைச்சர் ஹொசைன் அமிரப்டோல்லாஹியன் தெரிவித்துள்ளார்.