டோங்கா வெடிப்புக்குப் பின்னர் எண்ணெய் கசிவு இரட்டிப்பாகியுள்ளது – பெரு
30 Jan,2022
பெருவியன் கடற்கரையில் எண்ணெய் கசிவு முன்னர் அறிவிக்கப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனவரி 15 அன்று கிட்டத்தட்ட 12,000 பீப்பாய்கள் எண்ணெய் கடலில் கசிந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சர் ரூபன் ராமிரெஸ் கூறினார்.
இதனால் உள்ளூர் மீன்கள் மற்றும் கடல் பறவைகள் இறப்பிற்கு காரணமாக அமைந்தது என்றும் கசிவு சுற்றுச்சூழல் பேரழிவு என்றும் அதிகாரிகள் விவரித்தனர்.
டோங்காவில் எரிமலை வெடிப்பபினால் ஏற்பட்ட சுனாமி பேரலையால் லா பாம்பிலா சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள டேங்கர் சேதமடைந்ததாக கூறப்படுகின்றது.
லிமாவிற்கு வடக்கே சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள இந்த தளம், ஸ்பானிஷ் எண்ணெய் நிறுவனமான ரெப்சோலுக்குச் சொந்தமானது.
இந்நிலையில் இதற்கு இழப்பீடு கோரியுள்ள பெரு, இந்த சம்பவத்தில் ரெப்சோலின் பங்கு குறித்து வழக்கறிஞ்ஞர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நான்கு நிர்வாகிகள் நாட்டை விட்டு வெளியேற 18 மாதங்களுக்கு தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.