மிக ஆபத்தான ஏவுகனையை வெற்றிகரமாக சோதித்தது வட கொரியா...
30 Jan,2022
வடகொரியாவில் உணவு பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. பொருளாதார மிக மோசமடைந்ததை தொடர்ந்து, சீனாவுடனான வர்த்தகத்தை வடகொரியா மீண்டும் தொடங்கியுள்ளது.
மிகவும் ஆபத்தான ஏவுகனை ஒன்றை வடகொரியா வெற்றிகரமாக இன்று சோதித்துள்ளது. இந்த ஒரே மாதத்தில் மட்டும் வடகொரியா 7-வது முறையாக ஏவுகனை சோதனை நடத்தியிருப்பதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் காணப்படுகிறது.
வடகொரியாவில் நடக்கும் ஏவுகனை சோதனைகளை உன்னிப்பாக கண்காணித்து வரும் தென் கொரியா, அடுத்த மாதம் நீண்ட தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதம் ஒன்றை வடகொரியா சோதனை செய்யக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2017-க்கு பின்னர் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஏவுகனையை வடகொரியா இன்று வெற்றிகரமாக சோதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து அணு ஆயுதங்களை சோதித்து வருவதால் வடகொரியா மீது வல்லரசு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அங்கு பொருளாதார பிரச்னைகள் அதிகம் காணப்படும் சூழலில், அணு ஆயுதங்களை பலப்படுத்தும் முயற்சிகளை வடகொரிய அரசு மேற்கொண்டு வருகிறது.
இன்று சோதிக்கப்பட்ட ஏவுகனை சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் என்றும், அரை மணி நேரத்தில் சுமார் 800 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் என்றும் தென்கொரிய அரசு கூறியுள்ளது.
இந்த ஏவுகனை கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்குதல் நடத்தக் கூடியது என்று ஜப்பான் அரசு எச்சரிக்கை செய்துள்ளது. அதேநேரம் வடகொரியாவில் உள்நாட்டு பிரச்னைகள் அதிகம் இருப்பதாகவும், அதனை திசை திருப்பும் நோக்கத்தில் அதிபர் கிம் ஜோங் உன்னின் அரசு இதுபோன்ற ஏவுகனை சோதனைகளில் தேவையின்றி ஈடுபட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வடகொரியாவில் உணவு பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. பொருளாதார மிக மோசமடைந்ததை தொடர்ந்து, சீனாவுடனான வர்த்தகத்தை வடகொரியா மீண்டும் தொடங்கியுள்ளது.
சீனா மற்றும் அதன் கூட்டாளியான ரஷ்யா ஆகிய நாடுகள் வடகொரியாவுக்கு ஆதரவாக உள்ளன. அந்த வகையில், புதிதாக வடகொரியா மீது ஏற்படுத்தப்பட வேண்டிய பொருளாதார தடைகளை இந்த 2 நாடுகளும் தடுத்து நிறுத்தியுள்ளன.