ரஷ்ய படைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளார்கள் என்னவும் நடக்கலாம்
28 Jan,2022
ஜேர்மனில் அமெரிக்க துருப்புகள் 35,000 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அது போல பிரித்தானியாவில் 9,500 அமெரிக்க துருப்புகள் நிலை கொண்டுள்ளது. மேலும் இத்தாலியில் 12,400 அமெரிக்க துருப்புகள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் உக்கிரைன் நோக்கிச் செல்ல பைடன் என்னேரமானாலும் உத்தரவிடக் கூடும் என்று கூறப்படுகிறது. நேற்றைய தினம்(27) மாலை அமெரிக்க அதிபர் பைடன் உக்கிரைன் ஜனாதிபதியோடு பேசியுள்ளார். உங்கள் நாட்டை ரஷ்யா கைப்பற்ற இருக்கிறது. இது நிச்சயம் நடக்க உள்ளது என்று அவர் உறுதி பட தெரிவித்துள்ளார் என்பது பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இதேவேளை ஜேர்மனி, தனது நாட்டில் இருந்து அமெரிக்க படைகளை நேரடியாக உக்கிரைக்கு அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சிக் கூத்தாடுகிறது. இது இவ்வாறு இருக்க இத்தாலியும் ரஷ்யா மீது உள்ள பயத்தால், இவ்வாறு கூறுகிறது. ஆனால் அமெரிக்கா தனது படைகளை நிச்சயம் உக்கிரைக்கு அனுப்பும் என்று எதிர்பார்கப்படுகிறது.
அமெரிக்க பரா ரூப்பர்ஸ் என்று சொல்லப்படும் அதிரடிப் படையினர், தயாராக உள்ளதாக அமெரிக்கா சற்று முன்னர் அறிவித்துள்ளது. எனவே உக்கிரைன் மண்ணில் வைத்து ரஷ்யாவுக்கு ஒரு பாடத்தை புகட்ட அமெரிக்கா முனைகிறது. இது இவ்வாறு இருக்க பிரிட்டன், தனது பெரும் படைகளை அனுப்பா விட்டாலும், தேவையான முக்கிய சில படையணிகளை உக்கிரைனுக்கு அனுப்பி வைத்துள்ளதோடு மட்டுமல்லாது. மிக மிக சக்தி வாய்ந்த அதி நவீன ஆயுதங்களை கொடுத்து உதவியுள்ளது. ஆயிரம் ஆயிரம் படைகள் வந்தாலும். நவீன ரக ஆயுதங்களுக்கு முன்னால் அவர்களால் நிச்சயம் தாக்குப் பிடிக்க முடியாது. எனவே பிரித்தானியா தமது மதி நுட்பத்தை பாவித்து செயல்பட்டு வருகிறது.