'அடுத்த மாதம் ரஷ்யா யுக்ரேனை தாக்கலாம்' - ஜோ பைடன் எச்சரிக்கை
28 Jan,2022
அடுத்த மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான ''தெளிவான வாய்ப்புகள்'' இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் யுக்ரேனை சேர்க்கக் கூடாது உள்ளிட்ட, ரஷ்யாவின் முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா மறுத்துள்ள நிலையில் ''நேர்மறையான நிகழ்வுகளுக்கு மிகவும் குறைந்த வாய்ப்புகளே'' உள்ளன என்று ரஷ்யா கூறியுள்ளது.
சமீப வாரங்களில் யுக்ரேன் உடனான எல்லையில் சுமார் ஒரு லட்சம் ரஷ்ய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
யுக்ரேன் உடனான எல்லையில் படைகளை தொடர்ந்து அதிகரித்து வரும் ரஷ்யா, யுக்ரேன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி வருகிறது.
ஆனால், மேற்கத்திய நாடுகள் ரஷ்ய யுக்ரேனை தாக்கலாம் என்று கூறி வருகின்றன.