தீவை இலக்காகக் கொண்டு தன் படைப்பலத்தை காட்சிப்படுத்தியது சீனா. இதற்கு பதிலடியாக தைவானும் ஜெட்
சீனாவின் விமானப்படை தைவான் நோக்கி 52 விமானங்களை அனுப்பியது, தீவை இலக்காகக் கொண்டு தன் படைப்பலத்தை காட்சிப்படுத்தியது சீனா. இதற்கு பதிலடியாக தைவானும் ஜெட் விமானங்களை தயார் படுத்தியுள்ளது.
தைவானின் பாதுகாப்பு அமைச்சகம், இது தொடர்பாக கூறும்போது, தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் (ADIZ) 39 சீன விமானங்கள் நுழைந்ததாகவும், மேலும் 13 விமானங்கள் திங்களன்று நுழைந்ததாகவும் கூறியது. முதல் குழுவில் 34 ஜே-16 போர் விமானங்கள், நான்கு எலக்ட்ரானிக் போர் விமானங்கள் மற்றும் ஒரு எச்-6 குண்டு வீச்சு விமானங்கள் ஆகியவை அடங்கும், திங்களன்று 10 ஜே-16 கள், இரண்டு எச்-6 குண்டுவீச்சுகள் மற்றும் ஒரு ஒய்-8 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கு விமானங்கள் இருந்ததாகக் கூறியுள்ளது.
சீனா கடந்த காலத்தில் தைவானின் வான்பாதுகாப்பு அடையாள மண்டலத்துக்குள் விமானங்களை அனுப்பியுள்ளது - ஆனால் தைவானின் வான்வெளிக்குள் நுழையவில்லை. இது சீனா தன் படைபலத்தைக் காட்டுவதற்கும் ராணுவப் பயிற்சி காட்சிப்படுத்தலுமாக இருந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் சீனாவின் வான்வழி ஊடுருவல்கள் இதுவரை முன்னோடியில்லாத வகையில் அதிகரித்ததது. மேலும் கடந்த ஆண்டு ஒரே நாளில் 56 விமானங்கள் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் பறந்தது., தைவானின் பாதுகாப்பு அமைச்சர் இது பற்றி கூறும்போது 40 ஆண்டுகளில் இதுதான் உறவில் முறிவு ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையாக இருந்தது என்று கூறினார்.
தைவான் வான்பாதுகாப்பு மண்டலத்துக்குள் சமீபத்திய வான்வழி ஊடுருவல்கள் அமெரிக்க-ஜப்பான் பயிற்சிகளுக்கு பதிலடியாக இருக்கலாம் என்று சீன ஊடகங்களில் உள்ள அறிக்கைகள் கூறின. 1949 இல் சீன உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து இரு நாடுகளும் தனித்தனி என்றாலும் தைவானை சீனா தனது மாகாணமாகப் பார்க்கிறது.
கடந்த ஆண்டு, அக்டோபர் 1 ஆம் தேதி சீனாவின் ஊடுருவல்கள் அதன் தேசிய தினத்துடனும், அக்டோபர் 10 ஆம் தேதி தைவானில் கொண்டாடப்பட்டதேசிய தினத்திற்கு முன்னதான ஊடுருவல்களாகவும் அமைந்தன.
1949 இல் சீன உள்நாட்டுப் போரின் முடிவில் இருந்து இரு நாடுகளும் தனித்தனியாக ஆளப்பட்டாலும், தைவானை சீனா தனது மாகாணமாகப் பார்க்கிறது. உறவுகள் சரிந்தன. தைவானுடன் முறையான அரசு தரப்பு உறவுகளைப் பேணும் எஞ்சிய சில நாடுகளை விலக்குவது உட்பட, சீனா தன் அழுத்தத்தை தைவான் மீது அதிகரித்தது. அதாவது இது 2016 இல் ஜனநாயக முற்போக்குக் கட்சி (DPP) மற்றும் திசாய் இங்-வென் ஆகியோரின் தேர்தலுக்குப் பிறகு தைவான் மீது சீனா தன் நெருக்குதலை அதிகரித்தது. 2020 இல் மகத்தான வெற்றிக்குப் பிறகு திசாய் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.
இவர் தைவானின் சுதந்திரத்தை வலியுறுத்துவதாக சீனா குற்றம் சாட்டியது. அதே நேரத்தில் தைவான் தற்போதைய நிலையைத் தொடர விரும்புவதாகவும், பெய்ஜிங்கால் "ஒருதலைப்பட்சமாக மாற்றப்படுவதைத் தடுக்கும்” நோக்கத்துடனும் செயல்படுவோம் என்று திசாய் கூறினார்.