ஐக்கிய அரபு அமீரகத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்த அதிரடி தடை
23 Jan,2022
.
அபுதாபி விமான நிலைய பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, ஒரு மாதத்திற்கு ட்ரோன்களைப் பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி தடை விதித்துள்ளது.
ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு எண்ணெய் நிறுவனமான ADNOC-யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்ரோன் மூலம் அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 ஆயில் டாங்கர்கள் தீப்பற்றி வெடித்துச் சிதறின. அந்த பகுதியே குழம்பாக காணப்பட்டது. இந்த தாக்குதலில்
2 இந்தியர்கள் ஒரு பாகிஸ்தானியர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். ஹவுதி அமைப்பு பொறுப்பேற்பு அபுதாபி விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடக்கும் இடத்திலும் தீப்பற்றியது. ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்பான ஹவுதி இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய சவூதி தலைமையிலான கூட்டணியை எதிர்த்து செயல்படும் அமைப்பாக ஹவுதி அமைப்பு சவூதி அரேபியா மீது ஹவுதி அமைப்பு பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ட்ரோன்களைப் பயன்படுத்த தடை தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதும் திட்டமிட்ட தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணையை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே தொடங்கி உள்ளது. இந்த நிலையில் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு ட்ரோன்களைப் பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி தடை விதித்துள்ளது. விதிகளை மீறி பயன்படுத்தினால்...
டிரோன், ஆளில்லா விமானங்களை பயன்படுத்த கூடாது என்று அதன் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இலகு ரக விளையாட்டு விமானங்களையும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமான வேலைக்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்துபவர்கள் இதற்கான தேவையான விதிவிலக்குகள் மற்றும் உரிய அனுமதிகளை கண்டிப்பாக அதிகாரிகளிடம் கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.