ரஷ்யாவுக்கு பலத்த அடி ஒன்றைக் கொடுக்க அமெரிக்கா பிரிட்டன் திட்டம் !
22 Jan,2022
உக்கிரைன் நாட்டை கைப்பற்ற முனைந்தால், எல்லையில் வைத்து ரஷ்ய படைகளுக்கு கடும் பாடம் ஒன்றை புகட்ட அமெரிக்கா மற்றும் பிரித்தானியா திட்டம் தீட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடைசி தடவையாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரை, ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் வைத்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் சந்திக்கிறார். இதில் ரஷ்யா உடனடியாக பின் வாங்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கை தான் முன் வைக்கப்பட உள்ளது. இதனை ரஷ்யா ஏற்றுக் கொண்டால் சரி. இல்லையென்றால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படு பயங்கரமான ஆயுதங்களை, உக்கிரைக்கு வழங்கி பழி தீர்த்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. காரணம் யாரும் சற்றும் எதிர்பாராமல் உக்கிரைன் நாட்டில் 9 லட்சம் இளைஞர்கள் துணைப் படையில் திடீரென இணைந்துள்ளார்கள். இதனால் ..
2 லட்சத்தி 50,000 ஆயிரம் படைகளைக் கொண்ட உக்கிரைனில் தற்போது 9 லட்சம் பேர் துணைப் படையாக உள்ளார்கள். இந்த இளைஞர்கள் கையில் கன ரக ஆயுதங்களை மட்டும் கொடுத்தால் போதும் சில வேளை ரஷ்ய படைகள் படு தோல்வியை அடைய வாய்ப்புகள் உள்ளதாக, அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த துருப்புச் சீட்டை தான் தற்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா கைகளில் எடுத்துள்ளது. முன்னேறும் ரஷ்ய டாங்கிகளை துவம்சம் செய்ய, குண்டுகளை வழங்கியுள்ளது பிரிட்டன். இதுபோக ரஷ்ய ஏவுகணை தாக்குதலை சமாளிக்க, எதிர் ஏவுகணைகளை வழங்கியுள்ளது அமெரிக்கா. எனவே ரஷ்யாவின் 1 லட்சம் படை தான் மிச்சம். அவர்கள் தான் உக்கிரைன் நாட்டினுள் முன்னேறுவார்கள். அவர்களை சமாளித்தால் போதும் என்பதே நிலைப்பாடாக உள்ளது. மேலும் ஸ
சொல்லப் போனால் ரஷ்ய விமானப் படை பாரிய தாக்கத்தை உக்கிரைனில் நிகழ்த்த முடியாது. காரணம் உக்கிரைன் நாட்டில் சொந்த தயாரிப்பான பல விமான எதிர்ப்பு ஏவுகணகள் உள்ளது. எனவே முன்னேறும் ரஷ்ய படைகளை, சமாளித்தாலே போதும்.