6 போர் கப்பலை நகர்த்திய ரஷ்யா: முழு அளவில் உக்கிரைனை பிடிக்க ரெடி:
19 Jan,2022
தனது 6 துருப்புக்காவிக் கப்பல்களை பிரித்தானியா ஊடாக நகர்த்தி, உக்கிரைன் நாட்டின் மறு முனையில் உள்ள கடல் பரப்பையும் ஆக்கிரமித்துள்ளது ரஷ்யா. இதனை அடுத்து , 2 முனைத் தாக்குதல் திட்டம் ரெடியாகியுள்ளது என்று அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதுவரை காலமும் ரஷ்ய உக்கிரைன் எல்லையில் படைகளை குவித்து வந்தது ரஷ்யா. ஆனால் அந்தப் பகுதியை நேட்டோ நாடுகள் பலப்படுத்தி விட்டது. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து வருகிறது. இன் நிலையில், உக்கிரைன் நாட்டின் கடல் பகுதில் இருந்தும் தாக்குதலை தொடங்க ரஷ்யா திட்டம் தீட்டி உள்ள நிலையில். உக்கிரைன் நாட்டை நிச்சயம் ரஷ்யா பிடிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. தமது 6 போர் கப்பல் ஆங்கில கால்வாய் ஊடாக பயணிக்க முன் அனுமதி கோரியது ரஷ்யாஸ இதனை அடுத்து
பிரித்தானியா அதற்கான அனுமதியை வழங்கிய நிலையில், 6 கப்பல்களும் ஆங்கில கால்வாய் ஊடாக பயணித்து உக்கிரைன் நாட்டின் கடல் பகுதிக்கு சென்றடைந்துள்ளது.