கொரோனா பரவல் தீவிரம்: “கனடாவுக்கு பயணம் மேற்கொள்ளவேண்டாம்” - அமெரிக்கா 
                  
                     12 Jan,2022
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	கனடா நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிதீவிரமாக இருக்கிறது. இதன் காரணமாக அந்த நாட்டுக்கு அமெரிக்கர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தி உள்ளது.
	 
	 
	கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற 80 இடங்களை அமெரிக்கா கண்டறிந்து நான்காம் நிலை பட்டியலில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கனடா, வெகுகாலமாகவே அமெரிக்கர்களுக்கு பிரபலமான இடமாக இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலான தொற்று நோய்களால், இருநாடுகளுக்கும் இடையேயான எல்லை அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களுக்கும் மூடப்படுவது வழக்கமாகி வருகிறது.