6 பேரை பலி கொண்ட நீர்வீழ்ச்சி விபத்து வீடியோ! சமூக ஊடகங்களில் வைரல்!!
09 Jan,2022
நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் விபத்தில் படகுகள் இருந்தவர்கள் உயிரிழந்ததை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
6 பேரை பலி கொண்ட நீர்வீழ்ச்சி விபத்து வீடியோ! சமூக ஊடகங்களில் வைரல்!!
பிரேசிலியா: சனிக்கிழமை (ஜனவரி 8, 2022) தென்கிழக்கு பிரேசிலில் நீர்வீழ்ச்சிக்கு கீழே மோட்டார் படகுகளின் மேல் பாறை சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு பேர் இறந்தனர் மற்றும் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.
நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் விபத்தில் படகுகள் இருந்தவர்கள் உயிரிழந்ததை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரண பயத்தில் அலறும் சுற்றுலாப் பயணிகளின் கூச்சலும் கூப்பாடும் நெஞ்சை உலுக்குகிறது. பாறைகள் திடீரென உடைந்து படகுகள் மீது விழுந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் உள்ள கேபிடோலியோ நீர்வீழ்ச்சியில் இந்த பயங்கரமான விபத்து ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும் இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் (Viral Video), அச்சத்தை ஏற்படுத்துகின்றன. திடீரென பாறை உடைந்து, தண்ணீரில் விழுவதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டனர்.
இரண்டு படகுகள் உடைந்ததால் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆறு பேர் உயிரிழந்துள்ள்னர். தொலைந்து போனவர்களை மொபைல் அலைவரிசை மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மூன்று பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காணமல் போனவர்கள் தேடப்படுவருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது மற்றும் ஒருவர் தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார். 23 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இப்பகுதியில் இரண்டு வாரங்களாக பலத்த மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை (Viral Video) நாம் தினமும் பார்க்கிறோம். அவற்றில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன.
ஆனால், இந்த விபத்து வீடியோ நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி சோகத்தை ஏற்படுத்துகிறது. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் படங்களும் இணையத்தை கலக்கி வந்தன. தற்போது இந்த விபத்து வீடியோ இணையத்தில் பரவலாக பார்க்கப்படுகிறது.