கஜகஸ்தானில் ரஷ்ய துருப்புகள் ஏன்? ஆண்டனி கேள்வி
08 Jan,2022
கஜகஸ்தானில் எரிபொருள் விலை ஏற்றத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் டஜன் கணக்கிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசுக்கு எதிரான போராட்டத்தைக் கட்டுப்படுத்த, சில தினங்களுக்கு முன் அந்நாட்டு அதிபர் ரஷ்யாவின் உதவியை நாடினார்.
ரஷ்ய துருப்புகளும் கஜகஸ்தானில் களமிறக்கப்பட்டன. ரஷ்ய துருப்புகள் ஏன் கஜகஸ்தானில் களமிறக்கப்பட்டதென தெரியவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஆண்டனி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
மேலும் தங்கள் நாட்டுக்குள் நிலவும் அமைதியின்மையைத் தீர்க்க கஜகஸ்தான் ஏன் ரஷ்ய ராணுவத்தின் உதவியை நாட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஷ்ய தரப்போ, 'கலெக்டிவ் செக்யூரிட்டி டிரீட்டி ஆர்கனைசேஷன்' என்கிற ராணுவ ஒப்பந்தத்தின்படி கஜகஸ்தானுக்கு உதவுவதாக பதிலளித்துள்ளது.