தடுப்பூசி போடாத தம்பதி மரணம்
03 Jan,2022
அமெரிக்காவில் கோவிட் பாதித்த கணவன் , மனைவி ஒரே நாளில் பலியாகினர். கலிபோர்னியாவை சேர்ந்த ஆல்வரா, அவரது மனைவி சில்வியா பெர்னாண்டஸ். இருவருக்கும் கோவிட் பாதித்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். இத்தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளது.
"கோவிட் தடுப்பூசி குறித்து ஆல்வராவுக்கு பெரும் சந்தேகம் இருந்தது. இது தொடர்பாக அவர் கூகுளில் பார்த்தார், செய்திகளில் வரும் பலன் குறித்து அவர் நம்பவில்லை. மேலும் அவரே பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் வரட்டும் என காத்திருந்தார். இதற்கிடையே அவருக்கு நீரிழிவு நோயும் இருந்துள்ளது. அவருக்கு கோவிட் பாதிப்பு ஏற்படவே இறந்து போனார். இது போல் யாரும் இருக்க கூடாது " என்றார் அவரது சகோதரி அல்மா ஹெர்னாண்டஸ்.