போயிங் விமானம் மீதான தடையை நீக்கியது இந்தோனேசியா
29 Dec,2021
2018 ஆம் ஆண்டில் 189 பேர் உயிரிழப்பிற்கு காரணமான போயிங் 737 மக்ஸ் விமான விபத்து இடம்பெற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த விமானம் மீதான தடையை இந்தோனேசியா நீக்கியுள்ளது.
விமானத்தின் அமைப்புகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் சோதனைக்கு உற்படுத்தப்பட்ட நிலையில் விதிக்கப்பட்ட தடைஉடன் அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படும் என இந்தோனேசியாவின் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான 737 மக்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 157 பேர் உயிரிழந்த நிலையில் உலக நாடுகள் குறித்த விமானத்திற்கு தடை விதித்திருந்தன.
இதனை அடுத்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் குறித்த போயிங் 737 மக்ஸ் விமானத்தை மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் இருந்து அத்த வகை விமானங்களை மீண்டும் சேவையில் இனைத்துக்கொள்ளவுள்ளதாக எத்தியோப்பிய விமான சேவையும் அறிவித்துள்ளது.
அவுஸ்ரேலியா, ஜப்பான், இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்த ஆண்டு விமானத்திற்கான தடைகளை நீக்கிய நிலையில், 180க்கும் மேற்பட்ட நாடுகள் போயிங் 737 மக்ஸ் விமானத்தை பயன்படுத்த அனுமதித்துள்ளன.