10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமான பயண தடையை நீக்கியது சிங்கப்பூர்
27 Dec,2021
உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அரசு ஐரோப்பிய நாடுகளுக்கான விமானங்களை ரத்து செய்தது.
இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் குடிமக்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக விமானங்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து சிங்கப்பூர் அரசு 10 ஐரோப்பிய நாடுகளுக்கு விமான பயண தடையை விலக்கி உள்ளது.
சிங்கப்பூர் குடிமக்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக போட்ஸ்வானா, எஸ்வதினி, கானா, லெசோதோ, மலாவி, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூரில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.