'விசா' கட்டுப்பாடு பிரிட்டனில் தளர்வு
26 Dec,2021
வெளிநாடுகளைச் சேர்ந்த சமூக சேவர்கள், வீட்டு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான 'விசா' கட்டுப்பாடுகளை ஐரோப்பிய நாடான பிரிட்டன் தளர்த்தியுள்ளது.
கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதில் பிரிட்டன் அரசு கட்டுப்பாடுகள் விதித்தது.இதனால் வெளிநாடுகளை சேர்ந்த சமூக சேவகர்கள், வீட்டு பணியாளர்கள், முதியோர் பராமரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பிரிட்டனுக்கு வர முடியவில்லை.
இதனால் அந்த பணியாளர்களுக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து வெளிநாடுகளைச் சேர்ந்த சமூக சேவர்கர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ௧௨ மாத விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.