கென்னடி கொலை வழக்கு: ஆவணங்கள் வெளியீடு
16 Dec,2021
அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான 1,500 ரகசிய ஆவணங்களை, அமெரிக்காவின் தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப் கென்னடி டல்லாசில் 1963 நவம்பர் 22ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக லீ ஹார்வே ஓஸ்வால்ட் என்பவர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்க அதிபர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை கமிஷன் விசாரணை நடத்தியது.
இந்த கொலை தொடர்பான முக்கிய ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவதாக அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.அதன்படி 1,500 ஆவணங்களை அமெரிக்காவின் தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டு உள்ளது. கென்னடி கொல்லப்பட்டது தொடர்பாக பல புதிய தகவல்கள் இதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் பல தகவல்களை அடுத்த சில மாதங்களில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.