ரஷ்யா பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் – ஜோ பைடன் எச்சரிக்கை
12 Dec,2021
உக்ரேனை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிகையில் ரஷ்யா ஈடுபடுமானால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
இந்த நிலை ஏற்படும் பட்சத்தில், அமெரிக்க துருப்பினை தரைமார்க்கமாக உக்ரேனுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன், இரண்டு மணிநேர உரையாடலின்போது, தெளிவாக இதனை தாம் வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேனின் கிழக்கு பிராந்தியத்திற்கு ஐக்கிய நாடுகள் மற்றும் நேட்டோ படைப் பிரிவினரையும் நகர்த்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.