தாய்லாந்திலும் பரவிய ஒமைக்ரான் வைரஸ் துருக்கி நாட்டில் அதிகரித்து காணப்படுகின்றன.
07 Dec,2021
இந்நிலையில், துருக்கியில் கொரோனாவால் பாதிப்பி அடைந்தோர் எண்ணிக்கை 89 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆயிரத்து 830 ஆக உள்ளது.
மேலும், கொரோனா வைரசில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 84 லட்சத்தைக் கடந்துள்ளது. 3.86 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உள்பட உலகின் 46 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையில், ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உள்பட உலகின் 46 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், 47-வது நாடாக ஒமைக்ரான் வைரஸ் தற்போது தாய்லாந்திலும் பரவியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி தாய்லாந்து வந்த 35 வயது நிரம்பிய அமெரிக்கருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒமைக்ரான் வைரஸ்
இதன் மூலம் தாய்லாந்தில் முதல் முறையாக ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடரில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இதனை தொடர்ந்து, ஒமைக்ரான் பரவிய நபர் தனிமைப்படுத்தப்பட்டு அவரை தாய்லாந்து சுகாதாரத்துறை தீவிர கண்காணித்து வருகிறது.