உக்ரைன் மீது போர் ரஷ்யா திடீர் திட்டம்
05 Dec,2021
உக்ரைன் மீது போர் தொடுத்து அதை கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கிரீமியா பகுதியை 2014ல் ரஷ்யா கைப்பற்றியது; இதைத் தொடர்ந்து உக்ரைனையும் கைப்பற்றும் நோக்கில் அதன் எல்லையில் 1.75 லட்சம் ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தி உள்ளதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் 'நேட்டோ' கூட்டமைப்பில் இணைவதை எதிர்க்கும் ரஷ்யா 2022 ஜனவரியில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேநேரத்தில் ''உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பது அவ்வளவு சுலபமல்ல'' என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கிரிமியாவை இணைத்துக் கொண்டதற்காக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தற்போது உக்ரைன் மீது போர் தொடுத்தால் சர்வதேச பணப் பரிமாற்றத்திற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.
அவ்வாறு செய்தால் ரஷ்ய வர்த்தகர்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும். இது ரஷ்யாவின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்யும் என கருதப்படுகிறது.