ரஷ்யா - அக்டோபரில் மட்டும் 75,000 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
03 Dec,2021
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 74,893 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,930 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97.36 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1,217 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2.78 லட்சத்தைக் கடந்துள்ளது.
அங்கு கொரோனா தொற்றில் இருந்து 84.36 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 10.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.