விமான விபத்து: தந்தை மகளை காப்பாற்றிய ஐபேடு..!
18 Nov,2021
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பென்சில்வேனியாவின் பிட்ஸ்டன் டவுன்ஷிப்பில் உள்ள வில்கஸ்-பார் ஸ்க்ரான்டன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒற்றை எஞ்சின் கொண்ட செஸ்னா 150 விமானத்தில் பைலட், ஒரு ஆண் மற்றும் அவரது 13 வயது மகள் மட்டுமே பயணித்துள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேடாரில் காணாமல் போயுள்ளது.
இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணி நடைபெற்றது. விமானம் கடைசியாக இருந்த இருப்பிடத்துக்கு (Location) அருகே உள்ள மரங்கள் காடுகளில் சுமார் 30 பேர் கொண்ட குழு இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. மாலை நேரமாக இருந்ததாலும் குளிர் மற்றும் பனிப்பொழிவாக இருந்ததாலும் குறுகியதாக தேடுதலாகவே இருந்துள்ளது.
முதலில் விமானத்தின் பைலட்டை மீட்புக்குழுவினர் அடையாளம் கண்டு காப்பாற்றியுள்ளனர். அதன்பிறகு தொடர்ந்து தந்தை மகளை தேடும் பணி தொடர்ந்தது. இந்த நிலையில் சிறுமியின் ஐபேடில் இருந்து வந்த சிக்னலின் மூலம் அவர்களின் இருப்பிடத்தை மீட்புக்குழுவினர் கண்டறிந்தனர்.
ஐந்து மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அமெரிக்க விமானப்படை விமான நிலையத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 7 மைல் தொலைவில் அதிக மரங்கள் நிறைந்த பகுதியில் அவர்களை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தந்தையும் மகளும் சிறிய காயங்களின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பெடரல் ஏவியேஷன் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது