பாக்., ராணுவ தளபதியுடன் மோதல். தூதர் பதவி: அமெரிக்கா அதிர்ச்சி
16 Nov,2021
:ஐ.எஸ்.ஐ. எனப்படும் உளவு அமைப்பின் தலைவர் நியமனத்தில் ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதல் தொடர்வதால் பாக். பிரதமர் இம்ரான் கான் தன் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பாக்.கில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும் ராணுவத்தின் கையே எப்போதும் ஓங்கியிருக்கும். ராணுவத்துக்கு மிகப் பெரிய அளவில் உதவுவது ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு. அதிருப்திஅந்த அமைப்பின் புதிய தலைவராக தன் ஆதரவாளரான நதீம் அஞ்சுமை நியமிக்க ராணுவத் தளபதி ஜெனரல் குமர் ஜாவத் பஜ்வா வலியுறுத்தினார்.ஆனால் தற்போதுள்ள பயஸ் ஹமீது தொடர்வதற்கு பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்திருந்தார். இறுதியில் நதீம் அஞ்சுமை நியமிக்க பிரதமர் ஒப்புதல் அளித்தார்.
அவர் நவ., 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.நவ., 20ம் தேதிக்குள் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும்படி இம்ரான் கானுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.அவ்வாறு அவர் விலகாவிட்டால் அவரது கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை முதாஹிடா குவாமி அமைப்பு மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆகியவை விலக்கி கொள்ளும் என மிரட்டப்பட்டுள்ளது. இதனால் நவ., 20ம் தேதி இம்ரான் கான் பதவியை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. மேலும் தெஹ்ரிக் இ லப்பைக் பாகிஸ்தான் என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டது.
அதனால் பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. அந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்று அதன் தலைவர் சாத் ரிஸ்வி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நடவடிக்கைகள் ராணுவத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.முடிவுதற்போது ஐ.எஸ்.ஐ. தலைவர் நியமனத்தில் நேரடியாக மோதியுள்ளதால் இம்ரான் கானை பதவியில் இருந்து துாக்க ராணுவத் தளபதி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இம்ரான் கட்சியைச் சேர்ந்த பர்வீஸ் காதக் அல்லது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷபாஸ் நவாஸ் அடுத்த பிரதமராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்., பயங்கரவாத ஆதரவாளருக்கு தூதர் பதவி: அமெரிக்கா அதிர்ச்சி
கராச்சி: பாகிஸ்தானின் அமெரிக்க தூதராக பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான மசூத்கான் என்பவரை பிரதமர் இம்ரான்கான் நியமித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க பத்திரிகையில் மேற்கோள் காட்டி கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பதாக மத்திய அரசு தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறது. இதனை அந்நாடு மறுத்தாலும் செயல்பாடுகள் மாற்ற இருப்பதாக உணர முடியவில்லை. இதன் வெளிப்பாடாக அமெரிக்க தூதராக மசூத்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது செயல்பாடுகள் சமீப காலமாக பயங்கரவாத ஆதரவு தொடர்பாகவே இருந்து வந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபராக இருந்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவே பேசி வந்துள்ளார்.
கடந்த 2015ல் புர்கான்வானி என்பவர் காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார். இவரது இறுதிச்சடங்கில் இப்பகுதியை சேர்ந்த திரளானவர்கள் பங்கேற்றனர். இவரது 5 வது நினைவுநாளில் மசூத்கான் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். இதில் " புர்கான் வாணிக்காக வருந்துகிறோம். அவர் நமது இதயங்களில் வாழ்கிறார். இலட்சியத்திற்காக அவர் தன் உயிரை இழந்தார் " இவ்வாறு பாராட்டியுள்ளார்.
மேலும் ஹர்கத் அல் முஜாகிதீன் இஸ்லாமிய அமைப்பின் ஒரு கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இந்த அமைப்பின் தலைவர் ரஹ்மான்ஹலில் அல்குவைதா பயங்கரவாத அமைப்புடன் நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இது போன்ற அவரது பயங்கரவாத ஆதரவு செயல்பாடு கொண்ட ஒருவரை அமெரிக்க தூதராக நியமனம் செய்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.