ஒரு லட்சம் ஆர்மி படை குவிந்ததுஉக்கிரைன் மீது படை எடுப்பு என்பது நிச்சயம் !
15 Nov,2021
சற்று முன்னர் மேலதிகமாக 10,000 ஆயிரம் சிவப்பு ராணுவத்தை ரஷ்யா அனுப்பி உள்ளது. இதனால் ரஷ்யாவின் 1 லட்சம் படையினர் தற்போது உக்கிரைன் எல்லையில் நிலை கொண்டுள்ளார்கள். அமெரிக்கா விடுத்த கடும் எச்சரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரித்தானியா மற்றும் ஐ.நா விடுத்துள்ள கோரிக்கையை ரஷ்யா செவி கொடுத்து கேட்ப்பதாக இல்லை. ரஷ்யாவின் ராணுவத்தை சிவப்பு படை என்று கூறுவார்கள். அவர்கள் கொடியில் உள்ள சிவப்பு நிறத்தை, அவர்கள் பதக்கமாக சீருடைகளில் அணிந்திருப்பது மட்டும் அல்ல. அந்தப் படை எங்கே சென்றாலும் ரத்தக் களரி தான் மிஞ்சும் என்பது பொருள். அவ்வகையான கொடூரமான ஈவு இரக்கமற்ற படை தற்போது உக்கிரைன் நாட்டை முழுமையாக கைப்பற்ற நினைக்கிறது.
அமெரிக்க மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள், உக்கிரைன் நாட்டுக்கு தொழில் நுட்ப்ப வசதிகளையும் அதி நவீன ஆயுதங்களையும் வழங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால் ரஷ்ய படைகளுக்கு முன்னால் இவை தாக்குப் பிடிக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.