எச் 4' விசா உடனே வழங்க அதிபர் ஜோ பைடன் அரசு முடிவு
13 Nov,2021
அமெரிக்காவுக்கு 'எச் ௧ பி விசா' பெற்று செல்வோரின் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 'எச் 4' விசாவை உடனடியாக வழங்க, பைடன் அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு எச் ௧ பி விசா வழங்கப்படுகிறது. இவர்களின் மனைவி அல்லது கணவன் மற்றும் ௨௧ வயதுக்குட்டப்பட்ட குழந்தைகளுக்கு எச் ௪ விசா வழங்கப்படுகிறது. இந்த எச் 4 விசா வைத்திருப்போர் அமெரிக்காவில் வேலை பார்க்க2014 வரை அனுமதி வழங்கப்படவில்லை.
ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது எச் 4 விசா வைத்திருப்போர், அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை பெற அனுமதிஅளித்தார். இதனால் எச் 4 விசா பெற்று, அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக பெண்கள், அங்கு வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அமெரிக்க அதிபராக 2017ல் டிரம்ப் பொறுப்பேற்ற பின், எச் 1பி விசா மற்றும் எச் 4 விசாக்கள் வழங்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.எச்4 விசா வைத்துள்ளோர் அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் ஜனவரியில் பதவியேற்றார். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்திய பல்வேறு தடைகளை அதிரடியாக ரத்து செய்து வருகிறார்.அதன் ஒரு பகுதியாக, எச் 4 விசாதாரர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் விதித்த தடையும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் எச் 1 பி விசாவில் அமெரிக்க வருவோரின் மனைவி அல்லது கணவன் மற்றும், 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எச் 4 விசாவை உடனடியாக வழங்க பைடன் அரசு முடிவு செய்துள்ளது. இது அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சிஅளித்துள்ளது