விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் திருமணம் செய்து கொள்ள சிறை நிர்வாகம் அனுமதி
12 Nov,2021
விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவிற்கு தனது இணையரைத் திருமணம் செய்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் ராணுவத் தகவல்களை உளவு பார்த்து கசியவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனத் தலைவர் ஜூலியன் அசாஞ்சே கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியரான அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்க அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில் அதற்கு எதிராக அசாஞ்சே போராடி வருகிறார்.
இந்நிலையில் அசாஞ்சேவிற்கு தன்னுடைய இணையரான ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மோரிஸை திருமணம் செய்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அசாஞ்சே மற்றும் மோரிஸுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.