உக்கிரைனை ரஷ்யா கைப்பற்றப் போகிறது !பிரித்தானியா தனது துருப்பை போலந்துக்கு அனுப்பியது !
12 Nov,2021
பிரித்தானியா தனது துருப்பை போலந்துக்கு அனுப்பியது !
ஒரே நேரத்தில் போலந்தையும், உக்கிரைன் நாட்டையும் கைப்பற்றும் ஒரு பெரும் திட்டத்தில் ரஷ்யா உள்ளது. இதேவேளை உக்கிரைன் நாட்டின் எல்லையில் 90,000 ஆயிரம் துருப்புகளை ரஷ்யா குவித்துள்ள விடையம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் சற்று முன்னர் போலந்து நாட்டில் இருந்து வெறும் 20 மைல் தொலையில் உள்ள, எல்லையில் ரஷ்யா ஏராளமான தனது பரசூட் படையினரை தரையிறக்கம் செய்துள்ளது. இதனை அடுத்து பிரித்தானியா ஒரு போர் விமானத்தில் பிரித்தானிய படைகளை போலந்துக்கு அனுப்பி வைத்துள்ளது. கள நிலவரங்களை ஆராய்ந்து, போலந்து நாட்டுப் படைகளுக்கு உதவ பிரித்தானியா தனது படைகளை அனுப்பியுள்ளது. இதனால் ரஷ்யா மேலும் சீற்றம் அடையலாம்..
என்று கூறப்படுகிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளை புட்டின் குறிவைக்க ஆரம்பித்துள்ளார். இது 3 உலகப் போர் ஒன்றுக்கே வழி வகுக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கீழே வீடியோ இணைப்பு.
இன்று(12) அதிகாலை அமெரிக்க உளவு நிறுவன தலைமை அலுவலகம்(பெண்டகனில்) இருந்து 25 ஐரோப்பிய நாடுகளுக்கு ரகசிய தகவல் ஒன்று பரிமாறப்பட்டுள்ளது. இதில் தற்சமயம் எடுக்கப்பட்ட சாட்டலைட் புகைப்படம் ஆதாரமாக காட்டப்பட்டுள்ளது. சுமார் 90,000 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய ராணுவம், உக்கிரைன் எல்லையில் நிலை கொண்டுள்ளது. இது ரஷ்யாவின் 90 சத விகித ராணுவத்தையே அன் நாடு உக்கிரைன் பக்கம் நகர்த்தியுள்ளதை காட்டுகிறது என்றும். ரஷ்யா நிச்சயம் உக்கிரைனை கைப்பற்ற போர் ஒன்றில் இறங்கும், அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்க வேண்டும் என்று, அமெரிக்கா சற்று முன்னர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் உளவு பார்க்கும் சாட்டலைட் எடுத்த புகைப்படம் பெரும் அதிர்ச்சி தரும் விடையமாக உள்ளது.
ரஷ்யா ஓசை படாமல் தனது ராணுவத்தின் மிகப் பெரிய கட்டமைப்பை உக்கிரைன் பக்கமாக நகர்த்தியுள்ளது. அது போக சுமார் 12,000 ஆயிரம் டாங்கிகளையும் உக்கிரை நோக்கி நகர்த்தியுள்ளது. இதில் ரஷ்யாவின் அண்டை நாடுகள் ஆன, லட்வியா, எஸ்டோனியா மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளது. மிகப் பெரிய நாடான உக்கிரை மீது ரஷ்யா படை எடுக்குமாயின் , இந்த சின்னஞ் சிறிய நாடுகள் எம்மாத்திரம் என்ற கேள்வி எழுகிறது.
இதேவேளை மற்றுமொரு அண்டை நாடான பெலருஸ், ரஷ்யாவின் மாஜி மாநிலம் போலவே இருக்கிறது. இதனால் ரஷ்யா பெலருஸ் நாட்டை வைத்துக் கொண்டு பிராந்தியத்தில் பெரும் சிக்கலை தோற்றுவித்து வருகிறது. உக்கிரைனில் போர் வெடித்தால் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்கு செல்லும் கேஸ் (எரி வாயு) தடைப்பட பெரும் வாய்ப்புகள் உள்ளது.