போருக்கு தயாராகும் சீனா!!
12 Nov,2021
அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
தாய்வான் ஜலசந்திப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான, அவசியமான நடவடிக்கை என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், பயிற்சிகளின் நேரம், பங்கேற்பாளர்கள் மற்றும் இடம் பற்றிய எந்த விபரங்களையும் சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை.
தங்களை மீறி தாய்வானுடன் பிற நாடுகள் தூதரக உறவு கொள்வதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், தாய்வானுடன் அதிகாரபூர்வமற்ற தூதரக மற்றும் இராணுவ நட்புறவை அமெரிக்கா பேணி வருகிறது.
இந்தச் சூழலில் கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனா- தாய்வான் இடையிலான இராணுவ பதற்றம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.