ஏவுகணையால் தாக்கி அழிக்க தயாராகும் சீனா? வெளிவந்த அறிக்கையால் பெரும்
10 Nov,2021
சீனா, தாய்வானின் முக்கிய வான், கடல் பயண இணைப்புகளை முற்றுகையிடலாம் என்று தீவின் பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.
சீனா அதன் வான், கடல், நிலப் படையெடுப்பு ஆற்றலை வலுப்படுத்தி வருவதாகவும் தாய்வானிய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
தாய்வானின் முக்கிய துறைமுகங்கள், விமான நிலையங்கள், வெளிநாட்டை நோக்கிய பயணப் பாதைகள் போன்றவற்றைச் சீனா துண்டித்துவிடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சீனா, அதன் ஏவுகணை அமைப்புகளைக் கொண்டு முழு தாய்வானையும் தாக்கக்கூடும் என்றும் அறிக்கை கூறியது.
கடந்த 40 ஆண்டுகள் காணாத அளவில் தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றநிலை உருவாகியுள்ளது.
தைவான் சுய அரசாங்கத்தைக் கொண்ட ஜனநாயகத் தீவாகத் தன்னைக் கருதுகிறது. ஆனால் அதனைத் தனக்குச் சொந்தம் எனக் கருதும் சீனா, தாய்வானை எப்படியாவது தனது கட்டுக்குள் கொண்டுவந்து அதன் “ஒரே சீனா“ கொள்கையை நிறைவேற்ற முயல்வதாக நம்பப்படுகிறது. .
அது தொடர்பில் சீனா, அதன் போர் விமானங்களைப் பல முறை, தாய்வானிய வான் எல்லைக்குள் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.