பூமியை நெருங்கும் பிரம்மாண்ட விண்கல்
09 Nov,2021
பிரம்மாண்ட விண்கல் ஒன்று மணிக்கு 14,714 மைல் வேகத்தில் பூமிக்கருகில் பயணிக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
அந்த விண்கல், உண்மையில், பூமியிலிருந்து நிலவு இருக்கும் தொலைவைவிட பத்து மடங்கு தொலைவில், அதாவது, 2.5 மில்லியன் மைல் தொலைவில்தான் பயணிக்க உள்ளது என்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை.
ஆனாலும், கிட்டத்தட்ட முட்டை வடிவில் இருக்கும் இந்த விண்கல், 1,082 அடி நீளம் கொண்டது என்பதாலும், அது பூமியின் வட்டப்பாதையைக் கடக்க இருக்கிறது என்பதாலும், அதை மிகவும் அபாயகரமானது என நாசா வர்ணித்துள்ளது.
4660 Nereus என்று அழைக்கப்படும் அந்த விண்கல், அடுத்த மாதம், அதாவது டிசம்பர் மாதம் பூமியிலிருந்து 2.5 மில்லியன் மைல் தொலைவில் பயணிக்க உள்ளது
டிசம்பர் 11ஆம் திகதி, பூமிக்கு வெகு அருகில் வரும் அந்த விண்கல், பிறகு, சூரியனைச் சுற்றியிருக்கும் அதன் வட்டப்பாதைக்குச் சென்றுவிடும். அதற்குப் பிறகு மீண்டும் 2060ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், பூமியிலிருந்து 750,000 மைல் தொலைவில் அது பயணிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.