ஐரோப்பா! உச்சக்கட்டத்தை எட்டிய கொரோனா தொற்று
09 Nov,2021
உலக அளவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று திங்கட்கிழமை 250 மில்லியனைத் தொட்டுவிட்டது.
உருமாறிய ‘டெல்டா’ கிருமியால் ஏற்படும் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, பல நாடுகளும் வணிக, சுற்றுப்பயண நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
ஆனாலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் ஆபத்தான நிலைமையில் ஐரோப்பிய நாடுகள் உள்ளதென கூறப்படுகின்றது.
கடந்த மூன்று மாதங்களில் அன்றாட பாதிப்பு 36% குறைந்துள்ளதாக ‘ராய்ட்டர்ஸ்’ பகுப்பாய்வு தெரிவிக்கிறது. ஆயினும், அதிகம் பரவக்கூடிய உருமாறிய ‘டெல்டா’ கிருமியால் ஒவ்வொரு 90 நாள்களுக்கும் 50 மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
ரஷ்யா, உக்ரேன், கிரீஸ் உள்ளிட்ட 55 நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் அதிகரித்து வருகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி போடும் விகிதம் ஆகக் குறைவாக உள்ளது. உலகம் முழுதுமான அன்றாட புதிய பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஐரோப்பிய நாடுகளில்தான் பதிவாகி வருகின்றன.
அங்கு ஒவ்வொரு நான்கு நாள்களுக்கும் சில மில்லியன் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது.