ஓமன் வளைகுடாவில் ஈரான் போர் பயிற்சியை தொடங்கியதாக தகவல்
08 Nov,2021
ஈரானும், ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் அணு ஆயுத தவிர்ப்பு தொடர்பாக வியன்னாவில் வரும் 29-ந் தேதி நேரடி பேச்சு வார்த்தையை தொடங்க உள்ளன. இந்த நிலையில், ஈரான் தனது வருடாந்திர போர் பயிற்சியை ஓமன் வளைகுடாவின் கடலோரப்பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தியின் கிழக்கே 10 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள இடத்தில் தொடங்கி உள்ளதாக நேற்று அந்த நாட்டின் அரசு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதில் கடற்படை, விமானப்படை, ராணுவம் என முப்படைகளும் கலந்து கொண்டுள்ளதாகவும், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ராணுவ போக்குவரத்து விமானம், நீர்மூழ்கிக்கப்பல்கள், டிரோன்கள் இதில் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த போர் பயிற்சி எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.