மேலும் 8 சர்வதேச விமான நிலையங்களை திறக்கிறது கனடா!
03 Nov,2021
கனடாவில் கொரோனா தொற்று நோயை அடுத்து மூடப்பட்டிருந்த 8 சர்வதேச விமான நிலையங்கள் நவம்பர் -30 முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தி, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சர்வதேச பயணிகளை வரவேற்க கனடா தயாராகி வரும் நிலையில் மூடப்பட்டிருந்த மேலும் 8 சர்வதேச விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
அதிகரித்துள்ள தடுப்பூசி விநியோகத்தால் ஏற்பட்டுள்ள நன்மைகளை அடுத்து சர்வதேச பயணிகளுக்காக விமான நிலையங்களை பாதுகாப்பாக மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கனடிய போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா தெரிவித்தார்.
குளிர் காலத்தில் அதிக சா்வதேச பயணிகள் விமானங்களை அணுவ இந்த நடவடிக்கை உதவும் எனவும் அவா் கூறினார்.
மீண்டும் திறக்கப்படும் எட்டு விமான நிலையங்களின் விபரங்களுக்கு வருமாறு:
சென். ஜோன்ஸ் இன்டர்நஷனல்,
ஜோன் சி. முன்ரோ ஹாமில்டன் இன்டர்நஷனல்
வாட்டர்லூ சர்வதேச விமான நிலையம்
ரெஜினா இன்டர்நஷனல்
சாஸ்கடூன் ஜான் ஜி. டிபென்பேக்கர் இன்டர்நஷனல்
கெலோவ்னா இன்டர்நஷனல்
அபோட்ஸ்ஃபோர்ட் இன்டர்நஷனல்
விக்டோரியா இன்டர்நஷனல்
ஏற்கனவே, திறக்கப்பட்டுள்ள 10 சா்வதேச விமான நிலையங்களுடன் இணைந்து இந்த விமான நிலையங்களும் சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.