உலகிலேயே அதிக சக்தி கொண்ட லேசர் பீரங்கியை பரிசோதனை செய்யும் அமெரிக்கா: 2022
02 Nov,2021
பல நாடுகள் லேசர் துப்பாக்கிகளை தயாரித்து வருகிறது. ஆனால் லேசர் துப்பாக்கி முதல் கொண்டு லேசர் பீரங்கி வரை, இதில் முன்னோடியாக இருப்பது அமெரிக்கா தான். லேசர் துப்பாக்கிகள் ஊடாக பல விமானங்களை மட்டும் அல்ல எதிரி நாட்டு ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்த முடியும். இதற்கு மின்சாரம் மட்டும் இருந்தால் போதும். குண்டுகள் தேவை இல்லை, ஆயுத சப்பிளை தேவை இல்லை. ஒரு இடத்தில் மின்சாரம் மட்டும் இருந்தால், தொடர்ச்சியாக தாக்குதல் நடத்த முடியும். அந்த வகையில் சுமார் 330KW லேசர் பீரங்கி ஒன்றை..
அமெரிக்கா தயாரித்துள்ளது. அதனை 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பரிசோதனை செய்து பார்க்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த லேசர் பீரங்கியை பல நாடுகள் உண்ணிப்பாக கவனித்து வருகிறது.