அமெரிக்க எல்லையை கடக்க கொரோனா சோதனை தேவையில்லை: வெளியான அறிவிப்பு!
31 Oct,2021
.
அமெரிக்காவில் சாலை மார்க்கம் மற்றும் படகு மூலம் எல்லை கடப்பவர்களுக்கு இனி கொரோனா சோதனை தேவை இல்லை என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்கா எதிர்வரும் 8ம் திகதி முதல் சாலை மார்க்கம் எல்லையை கடக்கலாம் எனவும் படகு போக்குவரத்தை முன்னெடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இதனால் அமெரிக்கரல்லாத குடிமக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் மட்டும் சமர்ப்பித்தால் போதும் எனவும், கொரோனா இல்லை என்ற சான்றிதழ் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்கரல்லாத கலப்பின தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் எல்லையை கடக்க அனுமதி அளிக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இதனால் இருவேறு தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட கனேடிய மக்கள் பலர் எவ்வித சிக்கலுமின்றி அமெரிக்கா சென்றுவர முடியும் என கூறப்பட்டது.
தற்போது கொரோனா சோதனை தேவையில்லை என அமெரிக்கா அறிவித்திருந்தாலும், அமெரிக்காவில் இருந்து கனடா திரும்புவோர் கட்டாயம் PCR சோதனை முன்னெடுக்கப்பட வேண்டும், இதற்கு 200 டொலருக்கும் அதிகம் செலவாகலாம் என்றே தெரிய வந்துள்ளது.