சீனாவின் மெக்னீசியம் கிடைப்பதில் நெருக்கடி – ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கவலை
30 Oct,2021
கார்கள், விமானங்கள் மற்றும் இலத்திரனியல் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு முக்கியமான மூலப்பொருட்களில் ஒன்றான மெக்னீசியத்தினை ஐரோப்பிய நாடுகளுக்கு சீனாவே வழங்கி வருகின்றது.
தற்போது சீனாவின் மெக்னீசிய விநியோகப் பற்றாக்குறையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழில்துறைகள் ஆபயகரமான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, கொரோனா தொற்றுநோயினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழில்துறை மீட்சியைக் வெகுவாக பாதிக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழிற்துறைக்கு தேவையான மெக்னீசியததில் 95சதவீதமானவற்றை சீனாவே விநியோகிக்கின்றது.
எனினும் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி பற்றாக்குறையால் பெய்ஜிங் மெக்னீசிய உற்பத்தியை குறைத்தது. மேலும் ஆசியாவே உலகின் மிகப்பெரிய மெக்னீசிய உற்பத்தியாளராக உள்ளது,
ஆகவே ரஷ்யா மற்றும் இஸ்ரேல் போன்ற சிறிய உற்பத்தியாளர்கள் சீனா போன்ற நாடுகளின் உற்பத்திக் குறைவால் ஏற்படும் பற்றாக்குறையை மீள் நிரப்புவது கடினம் என்று பொலிட்டிகோ தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் செக் பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ், உயர்மட்ட கார் தயாரிக்கும் நாடுகளின் தலைவர்கள் – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சிமாநாட்டின் போது மெக்னீசியம் சம்பந்தமான பிரச்சினையை ஆராய்ந்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.