ஆஸ்திரேலியாவில் சமூக வலைத்தள கணக்கு ஆரம்பிக்க பெற்றோரின் அனுமதி அவசியம்! அமுலாகும் சட்டம்
27 Oct,2021
ஆஸ்திரேலியாவில் சமூக ஊடக நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளது.
16 வயதுக்கு குறைவான சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க பெற்றோரின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
சமூக ஊடகங்களுக்கான வயது கட்டுப்பாடுகளின் அடிப்படையில் மிகவும் கடுமையான நாடுகளில் மற்றும் ஊடகங்களுக்கு கட்டாய உரிமை செலுத்துதல் மற்றும் ஆன்லைன் தவறான தகவல், அவதூறுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது.
அதன்படி 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தள கணக்கில் துவங்குவதற்கு பெற்றோரின் அனுமதி அவசியம் என்றும், இதனை ஏற்க மறுக்கும் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு 55 கோடி அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்கள் சிறுவர்களின் மன நலனை பாதிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.