வங்கதேசத்தில் தொடர்கிறது வன்முறை; கோவில்கள் சூறை; 40 ஹிந்துக்கள் காயம்
18 Oct,2021
-நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது. நேற்று முன்தினம் பல இடங்களில் கோவில்களை வன்முறையாளர்கள் சேதப்படுத்தி சூறையாடினர்.
இந்த தாக்குதலில் ௪௦க்கும் அதிகமான ஹிந்துக்கள் காயம் அடைந்தனர்.சமூக வலைதளம்வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் இந்த ஆண்டும் வழக்கம் போல் துர்கா பூஜையை அமைதியாக கொண்டாடினர்.துர்கா பூஜையின் போது முஸ்லிம்களின் புனித நுால் அவமானப்படுத்தப்பட்டதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டது.இதையடுத்து, துர்கா பூஜை நடத்தப்படும் இடங்களிலும், கோவில்களிலும் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்தனர்.இதன்பின் ௧௬ல், நவகாளி மாவட்டத்தில் இரண்டு கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த நாடு முழுதும் பாதுகாப்பு பணியில், வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினமும் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை நீடித்தது. பெனி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் ஹிந்துக்களுக்கு சொந்தமான கடைகள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். சூறையாடினர்இதில் ௪௦க்கும் அதிகமான ஹிந்துக்கள் காயம் அடைந்தனர். கோவில்கள் மற்றும் கடைகளில் இருந்த பொருட்களை வன்முறையாளர்கள் சூறையாடினர். வன்முறையை கண்டித்து வங்கதேச ஹிந்து, பவுத்தர், கிறிஸ்துவர் ஐக்கிய கவுன்சில், வரும் ௨௩ம் தேதி முதல், உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
இமாம்கள் கண்டனம்வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து, மேற்கு வங்கத்தின் இமாம்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வங்கதேசத்தில் துர்கா பூஜை ஆண்டுதோறும் அமைதியாக நடக்கும். இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் சமூக விரோதிகள் வதந்தியை கிளப்பி வன்முறையை துாண்டியுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.வங்கதேச அரசு, வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் வங்கதேச ஹிந்துக்களுக்கு முழுமையாக ஆதரவு தருவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த பிப்லப் தேவ், மாநில திரிணமுல் காங்., அமைப்பாளர் பவுமிக் உட்பட பலரும் வங்கதேச வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துஉள்ளனர். 'மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, 'இஸ்கான்' அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.