பலவீனமான அமெரிக்க அரசுடன் சீனா போர் புரியும்: டிரம்ப்
07 Oct,2021
பலவீனமான அமெரிக்காவை சீனா மதிப்பதில்லை. அமெரிக்காவுடன் சீனா நிச்சயம் போர் புரியும்' என, முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் இருந்து வருகிறது. இந்நிலையில், உலக வர்த்தக சந்தையில் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயகக் கட்சி தலைமையில் சீனாவுடனான உறவு குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளதாவது:
அதிபர் தேர்தலில் மோசடி செய்யப்பட்டதால், அமெரிக்கா இப்போது பலவீனமான மற்றும் ஊழல் நிறைந்த தலைமையைக் கொண்டிருக்கிறது. அதற்கான மிகச் சிறந்த உதராணம், ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது தான். தலிபான்களிடம் அமெரிக்கா சரணடைந்துவிட்டதையே காட்டுகிறது. இதனால் பலவீனமான அமெரிக்காவை சீனா மதிப்பதில்லை. அமெரிக்காவுடன் சீனா நிச்சயம் போர் புரியும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.