25 ஆண்டுகளில் முதல் முறை.. டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்ட பெரும் சரிவு!
06 Oct,2021
கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடனிடம் தோல்வி கண்டு அதிபர் பதவியை இழந்தவர் டொனால்ட் ட்ரம்ப். இவர் 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஆகும் முன்னரே பெரும் செல்வந்தராக விளங்கியவர். இவருக்கு ஏராளமான தொழில்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது ரியல் எஸ்டேட்.

2/ 6
ரியல் எஸ்டேட் தொழிலில் சக்கரவர்த்தியாக விளங்கிய டொனால்ட் ட்ரம்ப், ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி வரும் ஃபோர்ப்ஸ் அமெரிக்காவின் டாப் 400 கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பிடித்து வந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம் கிடைக்காமல் கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாக பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

3/ 6
டொனால்ட் ட்ரம்பின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்களாகும், ஆனால் அவரின் சொத்து மட்திப்பில் 400 மில்லியன் டாலர்கள் குறைவாக இருப்பதால் இந்த முறை ஃபோர்ப்ஸ் அமெரிக்காவின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் டொனால்ட் ட்ரம்பால் இடம்பிடிக்க இயலாமல் போயுள்ளது. கடந்த ஆண்டும் டொனால்ட் ட்ரம்பிடம் இதே அளவுக்கு தான் சொத்து மதிப்பு இருந்தது என்றாலும், அவர் 339வது இடத்தில் இருந்தார்.

4/ 6
1997 முதல் 2016ம் ஆண்டு வரை ஃபோர்ப்ஸ் 400 முதல் அமெரிக்க கோடீஸ்வரர்களின் பட்டியலில் 200வது இடத்துக்குள் டொனால்ட் ட்ரம்ப் வந்துவிடுவார். ஆனால் அவர் அமெரிக்க அதிபராக 2016ம் ஆண்டு வந்ததற்கு பின்னர், ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் டொனால்ட் ட்ரம்ப் சரிவை சந்தித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது பட்டியலில் இருந்தே வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

5/ 6
2016ம் ஆண்டு ட்ரம்பின் பெரும்பாலான சொத்துக்கள் ரியல் எஸ்டேட் அடிப்படையில் இருந்தது. கடன்களை கழித்துவிட்டு 3.5 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அவரின் சொத்து மதிப்பு இருந்தது. அவற்றை அப்போதே விற்பனை செய்துவிட்டு வேறு வழிகளில் முதலீடு செய்திருந்தால் ட்ரம்புக்கு இந்த நிலை வந்திருக்காது.

6/ 6
கொரோனா காலத்தில் டெக்னாலஜி, கிரிப்டோ கரன்சி மற்றும் இதர பங்குகள் விலை கடுமையாக உயர்ந்தன, அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள் பெருமளவில் சரிந்தது. இந்த சரிவே டொனால்ட் ட்ரம்ப் போர்ப்ஸ் பட்டியலில் சரிவுக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது.