ஆஸி.,க்கு நீர்மூழ்கி கப்பல் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
21 Sep,2021
ஆஸ்திரேலியாவுக்கு அணு நீர்மூழ்கி கப்பல்களை கொடுக்கும் முடிவால் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டால் அமெரிக்கா கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என, வட கொரியா எச்சரித்துள்ளது.
எதிர்ப்புஇந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் அத்துமீறலை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து அணு நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பில் ஈடுபட சமீபத்தில் முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எட்டு அணு நீர்மூழ்கி கப்பல்களை வழங்க உள்ளது. இதற்கு வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வட கொரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் அணு நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஒப்பந்தம் மிகப் பயங்கரமானது. ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் அமைதியையும், பாதுகாப்பையும் அழிக்கக் கூடியது. இது அணு ஆயுத போட்டியை ஊக்குவிக்கும்.சர்வதேச அணு ஆயுத பரவல் தடை திட்டத்திற்கு எதிரான இந்த ஒப்பந்தத்தால் வட கொரியாவின் பாதுகாப்புக்கு மிகச் சிறிய அளவிலான தாக்கம் ஏற்பட்டாலும் சும்மா விட மாட்டோம். கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
சர்வதேச பாதுகாப்பு சூழல் மாறி வருவதற்கு ஏற்ப, நீண்ட கால அடிப்படையில் வடகொரியா, ராணுவ வலிமையை தொடர்ந்து மேம்படுத்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிரான்சிடம் 12 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது. ஏவுகணைதற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, அமெரிக்காவிடம் ஆஸ்திரேலியா எட்டு நீர்மூழ்கி கப்பல்களை வாங்க உள்ளது. 'இது நம்பிக்கைத் துரோகம்' என, பிரான்ஸ் புலம்பியுள்ளது. வட கொரியா, சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை உள்ளிட்ட பல ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது. இது, ஆசிய - பசிபிக் பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது.