பத்திரமாக பூமிக்கு திரும்பினர் சீன விண்வெளி வீரர்கள்
18 Sep,2021
மூன்று மாதங்களுக்கு முன் விண்வெளி பயணம் மேற்கொண்ட மூன்றுசீன வீரர்கள், நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.அமெரிக்கா, ரஷ்யாவை போலவே சீனாவும் தங்கள் நாட்டுக்கென பிரத்யேக விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.இந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க தேவையானவற்றை எடுத்துச் சென்று அதை கொஞ்சம் கொஞ்சமாக கட்டமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.இந்நிலையில் சீன விண்வெளி வீரர்கள் மூன்று பேர், ஜூனில் விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
மூன்று மாதங்கள் அங்கு தங்கி இருந்து விண்வெளி நிலையப் பணிகளை செய்து முடித்தனர்.விண்வெளி நிலையத்தில் இருந்து சீன அதிபர் ஷீ ஜிங்பிங் உடன் 'வீடியோகான்பரன்ஸ்' வாயிலாக உரையாடினர்.சீன வரலாற்றிலேயே அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி பணியாற்றியவர்கள் என்ற பெருமையை இந்த மூன்று வீரர்கள் பெறுகின்றனர்.பணிகள் முடிவடைந்த நிலையில் மூன்று வீரர்களும் விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மங்கோலியப் பகுதியில் மூன்று வீரர்களும் தரை இறங்கினர்.'சீன விண்வெளி நிலையம் அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.