தென் சீன கடல் ஆக்கிரமிப்பு சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
25 Aug,2021
''சர்வதேச தீர்ப்பாயம் நிராகரித்தும், தென் சீன கடலின் பெரும்பகுதி தனக்கு சொந்தம் என, சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. இதற்காக மிரட்டல், உருட்டலில் ஈடுபட்டுள்ளது.அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு ஆதரவாக இருப்போம்,'' என, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
இந்தியாவை பூர்வீகமாக உடைய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் நேற்று அவர் கூறியதாவது:
கடல்கள் பல நாடுகளின் பொருளாதார, வர்த்தக வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளன. கடல்சார் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் கொள்கை.தென் சீன கடலின் பெரும்பகுதி தனக்கு சொந்தமானது என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பான வழக்கில் சர்வதேச தீர்ப்பாயம் அதை நிராகரித்துள்ளது.இருப்பினும் வற்புறுத்தி, நெருக்கடி கொடுத்து, மிரட்டல் விடுத்து, தென் சீன கடல் பகுதியைக் கைப்பற்ற சீனாதொடர்ந்து முயற்சிக்கிறது.சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு சீனா செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில், இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உதவுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.