2001, செப். 11: ஆப்கானிஸ்தானில் செயல்பட்ட ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா அமைப்பு அமெரிக்கா மீது பயங்கவராத தாக்குதல். நியூயார்க்கின் உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரம் தகர்ப்பு. 3,000 பேர் பலி.
2001, அக். 7: ஒசாமாவை ஒப்படைக்க, ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான் மறுப்பு. அமெரிக்க கூட்டணி படைகள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்.
2001, நவ.13: அமெரிக்க கூட்டணி படை வசம் தலைநகர் காபூல் வந்தது. தலிபான் அமைப்பினர் ஓட்டம்.
2004, ஜன. 26: ஆப்கன் அரசியல் சாசனம் இயற்றப்பட்டது. அக். 2004ல் அதிபர் தேர்தல் நடந்தது
2004, டிச. 7: ஆப்கன் முதல் அதிபராக ஹமீத் கர்சாய் பதவி ஏற்பு. இரண்டு முறை(10 ஆண்டு) அதிபராக இருந்தார்.
2006, மே: தலிபான் பிடியில் மீதம் இருந்த ஹெல்மாண்ட் மாகாணத்துக்கு பிரிட்டன் படை வருகை. சண்டையில் 450 பிரிட்டன் படையினர் பலி.
2009, பிப். 17: அமெரிக்க படை எண்ணிக்கையை 1.4 லட்சமாக அதிபர் ஒபாமா அதிகரித்தார்.
2011, மே 2: பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அமெரிக்க படையால் ஒசாமா கொல்லப்பட்டார். அவரது உடல் கடலில் புதைக்கப்பட்டது. அமெரிக்காவின் 10 ஆண்டு ஒசாமா தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது.
2013, ஏப். 23: தலிபான் நிறுவனர் முல்லா முகமது ஓமர் மரணம். இவரது மரண செய்தி இரண்டு ஆண்டு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. உடல்நலக்குறைவால் பாகிஸ்தானின் கராச்சி மருத்துவமனை ஒன்றில் மரணம் அடைந்ததாக ஆப்கன் உளவு பிரிவினர் கூறினர்.
2014, டிச. 28: நேட்டோ கூட்டணி படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்தன. பெரும்பாலான அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றன.
2015: தலிபான் மீண்டும் எழுச்சி கண்டது. ஆப்கனில் பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது
2019, ஜன. 25: 2014ல் இருந்து உள்நாட்டு போரில் 45,000 வீரர்கள் மரணம் அடைந்ததாக புதிய அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்தார்.
2020, பிப். 29: தோகா தலைநகர் கத்தாரில் அமெரிக்கா-தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து. அல்-கொய்தா அல்லது எந்த ஒரு பயங்கரவாத செயலுக்கும் ஆப்கானிஸ்தானில் அனுமதி அளிக்க கூடாது என்ற நிபந்தனையை தலிபான் ஏற்றுக் கொண்டது. அமெரிக்கா, நேட்டோ படைகள் 2021, செப். 11க்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேற சம்மதம்.
2021, ஆக. 15: காபூல் நகரில் இருந்து அதிபர் அஷ்ரப் கனி வெளியேறினார். தலிபான் வசம் மீண்டும் ஆப்கன் வந்தது.