ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெப்ப அலை காரணமாக தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு இடங்களிலும் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலரும் உயிரிழந்திருக்காலம் என அஞ்சப்படுகிறது.
புவி வெப்ப மயமாதல் காரணமாக உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. ஒருபுறம் மேக வெடிப்பு, வெள்ளம் ஏற்படும் அதேநேரம் மறுபுறம் வெப்ப அலை, பஞ்சம் ஆகியவையும் ஏற்பட்டு வருகின்றன.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு... தலைவர்கள் இரங்கல்அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு... தலைவர்கள் இரங்கல்
இதைச் சமாளிக்க முடியாமல் வல்லரசு நாடுகள்கூட திணறி வருகின்றன. புவி வெப்ப மயமாதல் காரணமாக ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் இப்போது புதிதாக கிரீஸ் நாடும் இணைந்துள்ளது.
கிரீஸ் வெப்ப அலை
பல ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸில் இப்போது மிக மோசமான வெப்ப அலை ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. அந்நாட்டில் லங்காதாஸ் என்ற பகுதியில் அதிகபட்சமாக 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு கிரீஸ் நாட்டில் பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பம் இதுவாகும்.
காட்டுத்தீ
இதனால் அந்நாட்டிலுள்ள பல்வேறு காட்டுப்பகுதிகளிலும் பயங்கரமான காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78 இடங்களில் காட்டுத்தீ பற்றிய புகார்களைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தக் காட்டுத்தீயில் சிக்கி குறைந்தபட்சம் எட்டு பேர் வரை உயிரிழந்துள்ளதுள்ளனர். அங்கு நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாகவே காட்டுத்தீ அதிகமாக ஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜன்னலைக் கூட திறக்காதீர்கள்
கடுமையான இந்த வெப்ப அலை காரணமாக கிரீஸ் நாட்டில் இருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களிலும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாகக் காற்றின் தரமும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜன்னல்களைக் கூட திறக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம்
இந்த வெப்ப அலை இத்துடன் முடியாது என்றும் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிரீஸ் மற்றும் மேற்கு துருக்கி பகுதிகளில் வழக்கமான வெப்பநிலையைவிட 50 டிகிரி பாரன்ஹீட் வரை அதிக வெப்பம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலையும் காட்டுத்தீயும் துருக்கி நாட்டை மட்டும் பாதிக்கவில்லை. அண்டை நாடுகளிலும் இவை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
அண்டை நாடுகள்
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, பல்கேரியா, இத்தாலி, ருமேனியா, செர்பியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துருக்கி உள்ளிட்ட சில நாடுகளிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளன. இந்த காட்டுத்தீ அனைத்தும் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இதுவரை காட்டுத்தீயால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் ஏற்படுகிறது
கடந்த சில வாரங்களுக்கு முன்தான், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மோசமான வெள்ளம் ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதற்கு சில காலம் முன்பு தான் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் மிக மோசமான வெப்ப அலை ஏற்பட்டது. பேராசை காரணமாக மனிதன் இயற்கை வளங்களைத் தொடர்ந்து நாசப்படுத்தி வருவதால், இதுபோன்ற பேரிடர்கள் அதிகமாக ஏற்படத் தொடங்கியுள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.