பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது உண்மைதான் போலும்... ஆமாம், பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சுவிட்சர்லாந்தில் வாழிட உரிமம் வாங்கலாமாம்! வாழிட உரிமங்களில் பலவகை உண்டு. அவற்றில் ஒன்று B residence permit என்னும் வாழிட உரிமம்.
பொதுவாக இவ்வகை வாழிட உரிமம், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பு நாடுகளைச் சேராதவர்களும்கூட, பணம் இருந்தால் சுவிட்சர்லாந்தில் இந்த வகை வாழிட உரிமம் வாங்கலாம்.
அதாவது, தங்களிடம் போதுமான பணம் மற்றும் மருத்துவ மற்றும் விபத்துக் காப்பீடு ஆகியவை இருப்பதை அவர்களால் நிரூபிக்க முடிந்தால், தாங்கள் சுவிட்சர்லாந்தின் நலத்திட்டங்களை நம்பி வாழ வரவில்லை என்பதை நிரூபிக்க முடிந்தால், அவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழிட உரிமம் வாங்கலாம்.
அதுவும், கொரோனா வந்ததற்குப்பின், வளர்ந்த நாடுகளில் வாழ விரும்பாமல், பாதுகாப்பான செழிப்பான நாடுகளில் வாழ இந்த மக்கள் விரும்புவதால், B residence permit என்னும் வாழிட உரிமம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.
ஆனால், அதற்கான செலவு மிக அதிகம்... அந்த கட்டணம் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடுகிறது. Juraவில் ஆண்டுக்கு 146,816 சுவிஸ் ஃப்ராங்குகள், Neuchபூtelஇல் 190,000, Fribourgஇல் 209,000, Valaisஇல் 287,882, ஜெனீவாவில் 312,522 மற்றும் Vaudஇல் 415,000 சுவிஸ் ஃப்ராங்குகள்.
ஆக, ரஷ்யா, துருக்கி, சீனா, உக்ரைன் மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தின்கீழ் சுவிட்சர்லாந்தில் வாழிட உரிமம் பெற விழைகிறார்களாம்.