டைம் டிராவலர் மூலம் 2027-ஆம் ஆண்டிற்கு சென்ற நபர் அங்கு சிக்கிக் கொண்டிருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இருக்கும் விஞ்ஞான உலகில் எதுவும் சாத்தியம் என்ற அளவிற்கு ஆகிவிட்டது. ஏனெனில் அந்தளவிற்கு ஒவ்வொரு நாளும் புது புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், டைம் டிராவலர் மூலம் எதிர்காலத்திற்கு சென்றுள்ளதாக, பலர் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியாது. இந்நிலையில், சமூகவலைத்தளமான டிக் டாக்கில் இருக்கும் @unicosobreviviente என்ற பயனாளி, தன்னுடைய பக்கத்தில், 2027-ஆம் ஆண்டை பார்வையிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இவரை சமூகவலைத்தளங்களில் 1.3 மில்லியன் மக்கள் பின்பற்றி வருகின்றனர். அதில், நான் 20207-ஆம் ஆண்டிற்கு டைம் டிராவல் மூலம் சென்றேன். ஆனால் அங்கு மனிதர்கள் யாருமே இல்லை.
ஆனால், கட்டிடங்களும், கார்களும் இருந்தன. இதைப் பார்ப்பதற்கே வினோதமாக இருந்தது.
நான் இப்போது 2027-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 13-ஆம் திகதியில் இருக்கிறேன். இங்கு மனிதர்களை காணமுடியவில்லை, இருப்பினும் மின்சாரம், நெட் வேகம் இருக்கிறது. நான் இங்கு தனியாக இருக்கிறேன். ஷாப்பிங் மையங்களில் யாரும் இல்லை, கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
எனக்கு உதவுங்கள், நான் மனிதர்கள் இருக்கும் பகுதியை கண்டுபிடிக்க முயன்று வருகிறேன். நான் நம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கிறேன், எனக்கு சாப்பிட எதாவது கிடைக்குமா? இது எவ்வளவு காலம் நீடிக்கும், நான் இங்கு சிக்கிக் கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட இணையவாசி ஒருவர், அங்கு எதுவும் சரியாக இல்லை என்றால், எப்படி மின்சாரம், நெட் எல்லாம் கிடைக்கிறது என்று கேட்க், அதற்கு அவர் அது தெரியவில்லை.
ஆனால், 2021 மற்றும் 2027-ஆம் ஆண்டிற்கு ஏதோ ஒரு வகை தொடர்பு உள்ளது என்று பதிலளித்துள்ளார்.
இவர் தன்னுடைய டிக் டாக் பக்கத்தில், தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வரும், இவர் நான் 2021-க்கு திரும்பி வருவதற்கான வழியை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இவர் எப்படி டைம் டிராவல் மூலம் சென்றார்? இல்லை பொய் சொல்கிறாரா என்பது குறித்து எந்த ஒரு விவரமும் தெரியவில்லை.
ஆனால், அவரின் வீடியோ இப்போது பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஒரு சில இணையவாசிகள் இந்த வீடியோ ஒரு எடிட்டிங் நம்மை ஏமாற்றுகிறார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.