4 சீன ஹேக்கர்கள்; முடங்கிய அமெரிக்க நிறுவனங்கள்! – அமெரிக்கா பரபரப்பு புகார்!
20 Jul,2021
அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சீன ஹேக்கர்கள் முடக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சீன – அமெரிக்கா இடையேயான மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்க நிறுவனங்களை சீன அரசு உதவியுடன் சிலர் ஹேக் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவன சர்வர் ஹேக் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில் சீன அரசின் உதவியுடன் 4 சீன ஹேக்கர்கள் இதை செய்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சில நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழக வலைதளங்களையும் இந்த ஹேக்கர்கள் முடக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.