106 நாட்களுக்குப் பின் சூயஸ் கால்வாயில் இருந்து எவர்கிவன் கப்பல் விடுவிப்பு
08 Jul,2021
நாட்களுக்குப் பிறகு இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டதால் சூயஸ் கால்வாயில் சிறை வைக்கப்பட்டிருந்த ’எவர்கிவன்’ கப்பல் விடுவிக்கப்பட்டது.
106 நாட்களுக்குப் பிறகு இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டதால் சூயஸ் கால்வாயில் சிறை வைக்கப்பட்டிருந்த ’எவர்கிவன்’ கப்பல் விடுவிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் ‘எவர்கிவன்’ என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்றது. இதன் காரணமாக சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்து தடைப்பட்டு, உலக வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் கப்பல் மீட்கப்பட்ட போதும் இந்திய மதிப்பில் சுமார் 6 , 836 கோடி இழப்பீடாக கேட்டு சூயஸ் கால்வாய் ஆணையம் எவர்கிவன் கப்பலை சிறைப்பிடித்தது.
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அது 4,108 கோடியாக குறைக்கப்பட்டது. இதனை வழங்க ‘எவர்கிவன்’ கப்பலின் உரிமையாளர் ஷோய் கிசென் கைஷா ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டார். இதையடுத்து 3 மாதங்களுக்குப் பிறகு ‘எவர்கிவன்' கப்பல் நெதர்லாந்து நோக்கிய தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.